குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு பதவிகள் அலங்காரமானவை அல்ல; ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமக்களும் உயர்வானவர்: குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

Posted On: 22 APR 2025 2:43PM by PIB Chennai

எந்தவொரு ஜனநாயகத்திலும், அனைத்து குடிமக்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியான 'கர்த்தவ்யம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தில்லி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும், அலுவல்சார் வேந்தருமான அவர், அரசியலமைப்பு பதவிகள், சடங்குகள் அல்லது அலங்காரமாக இருக்கலாம் என்று சிலர் சமீபத்தில் கூறியுள்ளது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத புதிராக உள்ளதாகக் கூறினார். தம்மைப் பொறுத்தவரை, ஒரு குடிமகன் மிக உயர்ந்தவர் என்றும், ஏனென்றால் ஒரு நாடும் ஜனநாயகமும் குடிமக்களால் கட்டமைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தின் ஆன்மா ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திற்கு மேலே எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும், நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனைப் போலவே இதுவும் உயர்ந்தது என்றும் கூறினார்.

மக்களை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. மக்களாகிய நாம், அரசியலமைப்பின் கீழ், நமது விருப்பத்தை மக்கள் பிரதிநிதிகள் மூலம் பிரதிபலிக்க தேர்வு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.  'நெருக்கடி நிலையை' அமல்படுத்திய பிரதமர் 1977இல் அதற்கு பொறுப்பாக்கப்பட்டார். எனவே, இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் அரசியலமைப்பு மக்களுக்கானதாகும் என்று திரு தன்கர் கூறினார்.

தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. யோகேஷ் சிங், தில்லி பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் பேராசிரியர் பலராம் பாணி, தில்லி பல்கலைக்கழக தெற்கு தில்லி வளாகத்தின் இயக்குநர் திரு. பிரகாஷ் சிங் மற்றும் பல பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123424  

----

TS/IR/KPG/KR


(Release ID: 2123467) Visitor Counter : 26