கலாசாரத்துறை அமைச்சகம்
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் 38-வது கூட்டம் வரும் 23-ம் தேதி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது
Posted On:
22 APR 2025 11:31AM by PIB Chennai
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் 38-வது கூட்டம் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை ( 23-ம் தேதி புதன்கிழமை) நடைபெறுகிறது.
தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையுடன் வலுவான உறவை வளர்க்கும் நோக்கத்துடன் 1945-ம் ஆண்டு மத்திய அரசால் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும், மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் தலைவராகப் பணியாற்றும் மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அரசாணை அறிவிப்பின் மூலம் வாரியம் மறுசீரமைக்கப்படுகிறது.
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் 37-வது கூட்டம் 14.06.2022 அன்று அப்போதைய மத்திய கலாச்சார அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் 38-வது கூட்டத்தில் வாரிய உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட தீர்மானங்கள் / பரிந்துரைகள் மற்றும் முந்தைய கூட்டத்தின் போது தீர்மானங்கள் / பரிந்துரைகளையொட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
-----
(Release Id: 2123363)
TS/IR/KPG/KR
(Release ID: 2123380)
Visitor Counter : 15