பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 30 MAR 2025 2:34PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே,

பாரத் மாதா கி ஜே,

பாரத் மாதா கி ஜே,

குடி பட்வா மற்றும் புத்தாண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மதிப்பிற்குரிய சர்சங்க்சாலக் அவர்களே, டாக்டர் மோகன் பகவத் அவர்களே, சுவாமி கோவிந்த் கிரி ஜி மகராஜ், சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி மகராஜ், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சர்களான திரு நிதின் கட்கரி அவர்களே, டாக்டர் அவினாஷ் சந்திர அக்னிஹோத்ரி அவர்களே, இங்கு கூடியிருக்கும் பிரமுகர்களே, மூத்த சகாக்களே, இன்று இந்தப் புனிதமான ராஷ்டிர யக்ஞ சடங்கில் பங்கேற்கும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். இன்று, சைத்ர சுக்லா பிரதிபாதத்தின் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புனித நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்குகிறது. குடி-பட்வா, உகாதி மற்றும் நவ்ரேஹ் போன்ற பல்வேறு பெயர்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகின்றன. பகவான் ஜூலேலால் மற்றும் குரு அங்கத் தேவ் ஜி ஆகியோரின் பிறந்த நாட்களும் இன்று கொண்டாடப்படுகின்றன. நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் ஸ்மிருதி மந்திருக்குச் சென்று டாக்டர் பாபா சாஹேப்  அம்பேத்கர் மற்றும் குருஜிக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

இந்தக் காலகட்டத்தில், நாம் நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டையும் கொண்டாடியுள்ளோம். இன்று, நான் தீக்ஷபூமியில் பாபா சாஹேப்பை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்றேன். நவராத்திரி மற்றும் அனைத்துப் பண்டிகைகளையும் முன்னிட்டு நான் இந்த மாபெரும் ஆளுமைகளுக்கு தலைவணங்குகிறேன், நாட்டுமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, சங் பரிவார் அமைப்பின் ஒரு பகுதியாக மாதவ் நேத்ராலயா கோவில் அமைந்துள்ளது. இது குருஜியின் கொள்கைகளின் அடிப்படையில் பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இன்று அதன் புதிய வளாகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான புதிய மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். மாதவ் நேத்ராலயா அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் அவர்களின் பணிகளுக்காகவும், சேவை மனப்பான்மைக்காகவும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாடு இன்று சுகாதாரத் துறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக, நாட்டின் அனைத்து குடிமக்களும் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்று வருகின்றனர். ஏழை மக்கள் கண்ணியமாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் திட்ட     ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சிறந்த மருத்துவ சேவை பெறுவதைக் கருத்தில் கொண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்  காரணமாக பொதுவில் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ வசதிகளைப் பெறுகின்றர். நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் மருந்தகங்கள் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கி வருகின்றன. தற்போது நாட்டில் சுமார் ஆயிரம் டயாலிசிஸ் மையங்கள் உள்ளன. அவை இலவச டயாலிசிஸ் சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக நாட்டுமக்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான  சுகாதார வசதிகள் கிடைத்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும் வகையில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-----

(Release ID 2116782)

TS/SV/KPG/KR

 


(Release ID: 2122371) Visitor Counter : 17