உள்துறை அமைச்சகம்
பிரிவினைவாதத்தை நிராகரித்து இந்தியாவின் ஒற்றுமைக்கு முழுமையான அர்ப்பணிப்பை அறிவித்துள்ள ஹூரியத்துடன் இணைந்த ஜம்முகாஷ்மீர் மக்கள் இயக்கத்தின் முடிவை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்
Posted On:
11 APR 2025 4:28PM by PIB Chennai
பிரிவினைவாதத்தை நிராகரித்து இந்தியாவின் ஒற்றுமைக்கு முழுமையான அர்ப்பணிப்பை அறிவித்துள்ள ஹூரியத்துடன் இணைந்த ஜம்முகாஷ்மீர் மக்கள் இயக்கத்தின் முடிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள திரு அமித் ஷா, மோடி அரசின் கீழ் ஒற்றுமை உணர்வு ஜம்முகாஷ்மீரை ஆட்சிசெய்கிறது என்று கூறியுள்ளார். ஹூரியத்துடன் இணைந்துள்ள மற்றொரு அமைப்பான ஜம்முகாஷ்மீர் மக்கள் இயக்கம், பிரிவினைவாதத்தை நிராகரித்துள்ளது, இந்தியாவின் ஒற்றுமைக்கு முழுமையான அர்ப்பணிப்பைப் பிரகடனம் செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இவர்களின் முடிவை முழுமையாக ஏற்றுகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஹூரியத்துடன் இணைந்த 12 அமைப்புகள் பிரிவினைவாதத்திலிருந்து வெளியேறி இந்திய அரசியல் சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2120953)
TS/SMB/AG/RJ
(Release ID: 2120998)
Visitor Counter : 17