பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாழ்க்கையின் முதல் 1000 நாட்கள்: இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025-ல் முக்கிய கருப்பொருள்

प्रविष्टि तिथि: 09 APR 2025 4:19PM by PIB Chennai

ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஊக்குவித்தல், சுகாதார விளைவுகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இரண்டு வார நாடு தழுவிய இயக்கமான இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025 ஐ மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த முயற்சி ஊட்டச்சத்து இயக்கம் 2.0-ன் ஒரு பகுதியாகும். இது சமூக ஈடுபாடு செயல்முறைகளை வலுப்படுத்துவதிலும், தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் இரண்டின் அதிகாரத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

வாழ்க்கையின் முதல் 1000 நாட்களில் கவனம் செலுத்துவது என்பது தற்போதைய இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம் 2025-ன் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகும். இது கருத்தரித்தல் முதல் இரண்டு வயது வரை வாழ்க்கையின் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த நெருக்கடியான காலகட்டம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப் பருவத்தின் ஆரம்ப காலத்திலும் போதுமான ஊட்டச்சத்து மேம்பட்ட சுகாதார விளைவுகள், அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் முதிர்வயதில் அதிக வருவாய் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், தொடரும் தலைமுறைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை நாம் தவிர்க்க முடியும். 2024 மார்ச் 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கொண்டாடப்பட்ட முந்தைய இரு வார கால ஊட்டச்சத்து இயக்கம், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளுக்கு உணவளித்தல் நடைமுறைகள் போன்ற முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி இருந்தது.

***

(Release ID: 2120411)
TS/IR/RR


(रिलीज़ आईडी: 2120436) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Nepali , हिन्दी , English , Urdu , Gujarati , Telugu , Kannada