பிரதமர் அலுவலகம்
நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
Posted On:
08 APR 2025 10:26PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, "உலக அளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். "சர்வதேச அளவில் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாகியுள்ளதாக அவர் கூறினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "நாட்டில் உள்ள இளைஞர்களின் லட்சியங்கள், ஆர்வம் ஆகியவை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்று கூறிய அவர், அவர்களது லட்சியங்களைப் பூர்த்தி செய்வது நாட்டின் முன்னுரிமையாக உள்ளது என்றும் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்று கூறினார். "இந்த 100 நாட்கள் முடிவுகளுக்கானவை மட்டுமல்ல; எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைபப்பதற்கும்தான் என்று பிரதமர் கூறினார்.
இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையில், வருமான வரித் தள்ளுபடிக்கான வருமான உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில்(ஐஐடி )6,500 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். 50,000 புதிய அடல் சிந்தனை ஆய்வகங்கள் அமைக்கப்படுவது குறித்தும் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய கண்டுபிடிப்புகள் சென்றடைவதை உறுதி செய்யம் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர், அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். 125 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த பாலத்திற்குப் பதிலாக இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதிலும், முந்தைய அரசுகள் இதனைச் செயல்படுத்த தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது நாட்டின் முதலாவது செங்குத்து ரயில் பாலம் இது என்றும் அவர் கூறினார்.
---
(Release ID: 2120244)
TS/SV/KPG/RR
(Release ID: 2120427)
Visitor Counter : 18
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam