பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி அருணாச்சலப்பிரதேசம் பயணம்
प्रविष्टि तिथि:
09 APR 2025 11:43AM by PIB Chennai
ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு வார கால நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இம்மாதம் 10-ம் தேதி முதல் 13 வரை அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய அரசின் திட்டங்களின் செயலாக்கத்தை விரைவுப் படுத்தும் நோக்கில் பல்வேறு களப்பயணங்களிலும் ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார்.
இருவார கால ஊட்டச்சத்து இயக்கம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், கிரா தாடி, லோயர் சுபன்சிரி மாவட்டங்களுக்கும் செல்கிறார்.
ஊட்டச்சத்து இயக்கத்தின் கீ்ழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் தவிர, இப்பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், கூட்டுறவு அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் துணை ஆணையர்கள், மாவட்ட அதிகாரிகளுடன் அவர் விவாதிக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்போதைய திட்டங்களின் செயலாக்கம் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் நலனை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
-----
(Release ID 2120289)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2120365)
आगंतुक पटल : 33