பிரதமர் அலுவலகம்
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே நேபாள பிரதமரை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்
प्रविष्टि तिथि:
04 APR 2025 4:17PM by PIB Chennai
பாங்காக்கில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கு இடையே, நேபாள பிரதமர் திரு கே.பி. சர்மா ஒலியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்தியா - நேபாளம் இடையேயான தனித்துவமான, நெருக்கமான உறவு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். நேரடி, டிஜிட்டல் தொடர்புகள், மக்களுக்கு இடையேயான இணைப்புகள், எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போன்றவை குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான பன்முக ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த தொடர்ந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் இந்தியாவின் முன்னுரிமை நாடாக நேபாளம் உள்ளது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்தைத் தொடர்வதாக அமைந்துள்ளது.
*****
(Release ID: 2118826)
TS/PLM/DL
(रिलीज़ आईडी: 2119007)
आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam