ரெயில்வே அமைச்சகம்
ரயில் என்ஜின் உற்பத்தியில் புதிய சாதனை: 2024-25 நிதியாண்டில் 1,681 ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை இந்தியா விஞ்சி சாதனை படைத்துள்ளது
प्रविष्टि तिथि:
02 APR 2025 4:55PM by PIB Chennai
2024-25 நிதியாண்டில் 1,681 ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளதுடன், என்ஜின் உற்பத்தியில் உலகளாவிய தலைமையாகவும் உருவெடுத்துள்ளது. இந்த மைல்கல் உற்பத்தியானது அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களின் மொத்த ரெயில் என்ஜின்களின் உற்பத்தியை விஞ்சியதாக உள்ளது. இது உலகளாவிய ரெயில்வே துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2024-25 நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளில் 1,681 ரெயில் என்ஜின்களை தயாரித்து இந்திய ரெயில்வேயின் என்ஜின் உற்பத்தி பிரிவுகள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளன. இது முந்தைய 2023-24 நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1,472 என்ஜின்களுடன் ஒப்பிடும்போது 209 என்ஜின்கள் அல்லது 19% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்தச் சாதனை உற்பத்தி, நாட்டில் என்ஜின் உற்பத்தியில் மிக அதிகபட்சமானதாகும். இது ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் திறனை மேம்படுத்துவதில் அனைத்து பிரிவுகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கிறது.
ரயில் என்ஜின் உற்பத்தியில் தொடர்ச்சியான உயர்வு, " இந்தியாவில் தயாரியுங்கள்" முன்முயற்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட உத்திபூர்வ முடிவுகளின் நேரடி விளைவாகும். 2004 மற்றும் 2014-க்கு இடையில், இந்தியா மொத்தம் 4,695 என்ஜின்களை உற்பத்தி செய்தது. தேசிய ஆண்டு சராசரி 470 ஆகும். இதற்கு மாறாக, 2014 முதல் 2024 வரை, என்ஜின் உற்பத்தி குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் 9,168 என்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது ஆண்டு சராசரியை சுமார் 917 ஆக உயர்த்தியுள்ளது.
2024-25 நிதியாண்டில், இந்திய ரயில்வே தனது உற்பத்தி பிரிவுகளில் 1,681 என்ஜின்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் 700 என்ஜின்களையும், பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் 477 என்ஜின்களையும், பாட்டியாலா லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் 304 என்ஜின்களையும் மாதேபுரா மற்றும் மஹௌரா பிரிவுகள் 100 என்ஜின்களையும் தயாரித்துள்ளன.
***
(Release ID: 2117830)
TS/PKV/RR/DL
(रिलीज़ आईडी: 2117995)
आगंतुक पटल : 59