தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 01 APR 2025 5:31PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும்  பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நிதித் துறையை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கியின் முயற்சிகளைப் பாராட்டினார்.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்ததற்காகவும், நாட்டின் நிதி நிலப்பரப்பை வடிவமைத்ததற்காகவும் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா  சிந்தியா ரிசர்வ் வங்கியை பாராட்டினார். நாடு முழுவதும் 1,65,000 அஞ்சலகங்களைக் கொண்ட பரந்த கட்டமைப்பின் மூலம் நிதி உள்ளடக்கத்தில் இந்தியா போஸ்ட் வங்கி ஆற்றிய பங்கையும் அவர் விளக்கினார். அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கி, சேமிப்புத் திட்டங்களை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அதே நேரத்தில் பாரம்பரிய பணவிடை சேவை ஆகவும் உருவாகியுள்ளது. இது பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், வசதியாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்குகிறது என அவர் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி கொல்கத்தாவில் அதன் அடையாளமாக விளங்கும் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. தேசத்திற்கான ஒன்பது தசாப்த கால அர்ப்பணிப்பு சேவையை நிறைவு செய்யும் நிலையில், நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பணவியல் கொள்கை, நாணய மேலாண்மை, அரசுக் கடன் மேலாண்மை மற்றும் நிதி ஒழுங்குமுறை ஆகியவற்றின் முக்கிய பொறுப்புகளுக்கு அப்பால், ரிசர்வ் வங்கி நிதி உள்ளடக்கம், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நிதி அறிவை ஊக்குவித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

இந்த சிறப்பு அஞ்சல் தலை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் நிதி நிர்வாகத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை, ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை குறிக்கும் வகையில் அதன் பாரம்பரியத்தை சித்தரிக்கிறது. இதில் உள்ள முத்திரை கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கியின் அசல் தலைமையகத்தை முக்கியமாகக் காட்டுகிறது. அங்கு அது முதன்முதலில் நிறுவப்பட்டது, மும்பையில் அதன் தற்போதைய தலைமையகத்துடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக அதன் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 90 ஆண்டு லோகோவை "ஸ்திரத்தன்மை" என்ற கல்வெட்டுடன் முக்கியமாகக் காட்டுகிறது. நம்பிக்கை. வளர்ச்சி", அதன் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் தேசத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு தொடர்ச்சியான பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2117352)
TS/PKV/RR/SG/DL


(रिलीज़ आईडी: 2117445) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Malayalam