பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாக்பூரில் உள்ள தீக்ஷபூமிக்குத் தமது பயணத்தின் போது டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் மீதான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார்

प्रविष्टि तिथि: 30 MAR 2025 12:02PM by PIB Chennai

 

நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமி சமூக நீதியின் சின்னம் என்றும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்றும் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவை நனவாக்க அரசு மேலும் கடினமாக உழைக்க உறுதிபூண்டுள்ளது என்று மீண்டும் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறிய: "நாக்பூரில் உள்ள தீக்ஷபூமி சமூக நீதிக்கும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கும் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.

நமது கண்ணியத்தையும், சமத்துவத்தையும் உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்கியதற்காக பல தலைமுறை இந்தியர்கள் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

பாபாசாஹேப் காட்டிய பாதையில் எங்களது அரசு எப்போதும் நடைபோடுகிறது. மேலும் அவர் கனவு கண்ட இந்தியாவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் எடுத்துரைக்கிறோம்."

***

PLM/KV

 


(रिलीज़ आईडी: 2116757) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam