விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக கொள்முதல் செய்யப்படவில்லையென்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்

Posted On: 27 MAR 2025 3:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவத்தார்.

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த திரு. சவுகான், துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களிடமிருந்து அவை கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். உள்நாட்டு பருப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான பருப்பு உற்பத்தியில் 100% துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பிற வகையான பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2024-25-ம் ஆண்டு காரீப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் துவரம் பருப்பு (அர்ஹார்) கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், விவசாயிகளின் நலனுக்காக, கொள்முதல் காலத்தை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்து மே 1-ம் தேதி வரை நீட்டிக்க கர்நாடகா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து 100% துவரம் பருப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். ரபி பருவத்தின் போது, பருப்பு, கடுகு மற்றும் பயறு வகைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள்  தொடரும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115693

***

TS/SV/RJ/DL


(Release ID: 2115876) Visitor Counter : 44