சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாய்மார்களைக் காப்பாற்றுதல், எதிர்காலத்தை வலுப்படுத்துதல்

Posted On: 21 MAR 2025 6:41PM by PIB Chennai

பேறுகால இறப்பு இந்தியாவில் ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இது மகப்பேறு சுகாதார சேவைகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் சுகாதார தரம் மற்றும் அணுகலின் முக்கிய குறிகாட்டியாக செயல்படுகிறது. மகப்பேறு மரணம் என்பது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அல்லது கருக்கலைப்பு செய்த 42 நாட்களுக்குள், கர்ப்பத்தின் காலம் மற்றும் இடம் எதுவாக இருந்தாலும், கர்ப்பம் அல்லது அதன் மேலாண்மை தொடர்பான அல்லது மோசமடைந்த எந்தவொரு காரணத்தினாலும் அல்லது தற்செயலான காரணங்களால் இறப்பதாகும். பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உலகளாவிய சுகாதார இலக்குகளை அடைவதற்கும் மகப்பேறு இறப்பை நிவர்த்தி செய்வது அவசியம்.

மகப்பேறு இறப்பின் முக்கிய குறியீடுகளில் ஒன்று மகப்பேறு இறப்பு விகிதம் ஆகும், இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதே காலகட்டத்தில் 100,000 உயிருள்ள பிறப்புகளுக்கு தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. 2014-16-ல் 1,00,000 பிறப்புகளுக்கு 130 ஆக இருந்த பேறுகால இறப்பு விகிதம் 2018-20-ல் 1,00,000 பிறப்புகளுக்கு 97 ஆக குறைந்தது, பேறுகால இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா பாராட்டத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசின் பல்வேறு முயற்சிகள், மேம்பட்ட சுகாதார அணுகல் மற்றும் சிறந்த மருத்துவ தலையீடுகள் காரணமாக இருக்கலாம்.

2020 ஆம் ஆண்டுக்குள் பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் 100-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்கை வெற்றிகரமாக அடைந்து, பேறுகால இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், 2030 ஆம் ஆண்டிற்குள் பேறுகாலத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் 70 சதவீதத்திற்கும் கீழே நிலைத்த வளர்ச்சி இலக்கை அடைய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மகப்பேறு சுகாதார திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக பொருளாதார தடைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவை நாட்டில் பேறுகால இறப்பை மேலும் குறைப்பதில் முக்கியமானதாக இருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2113800

 

***

RB/DL


(Release ID: 2113917) Visitor Counter : 32