குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் 'ஊதா திருவிழா' நடைபெறுகிறது
Posted On:
21 MAR 2025 8:01PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் திறமைகள், சாதனைகள் மற்றும் அபிலாஷைகளைக் கொண்டாடும் வகையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் 'ஊதா திருவிழாவுக்கு’ இன்று (மார்ச் 21, 2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த விழாவிற்கு வருகை தந்து, மாற்றுத்திறனாளிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அவர் தனது உரையில், ஒடுக்கப்பட்ட வர்க்கத்திடம் உணர்திறன் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் நற்பெயரை தீர்மானிக்கிறது என்று கூறினார். இரக்கம், உள்ளடக்கிய தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவை நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மதிப்புகளாக உள்ளன. நமது அரசியலமைப்பின் முகப்புரை சமூக நீதி, சமத்துவ அந்தஸ்து மற்றும் தனிநபரின் கண்ணியம் பற்றி பேசுகிறது. சுகம்யா பாரத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான பங்களிப்பை உறுதி செய்யவும், அதிகாரம் அளிக்கவும் இந்திய அரசு பாடுபட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
விளையாட்டு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தொழில்முனைவோர் குறித்த பயிலரங்குகள், அபிலிம்பிக்ஸ், படைப்பாற்றல் களியாட்டம் மற்றும் கலாச்சார விழா போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஊதா திருவிழா' பல்வேறு குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் குறைபாடுகள் உள்ள நபர்களைப் புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் சேர்ப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113850
***
RB/DL
(Release ID: 2113908)