பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான பணிக்குழு கூட்டம் புதுதில்லியில் நிறைவடைந்தது

Posted On: 21 MAR 2025 12:51PM by PIB Chennai

ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள்  பங்கேற்கும் பயங்கரவாத எதிர்ப்பு  நடவடிக்கைகள் குறித்த பணிக்குழுவின் 14-வது கூட்டம் 2025 மார்ச் 19 முதல் 20 வரை புதுதில்லியில் நடைபெற்றது. இதில் ஆசியன் நாடுகளான லாவோ பிடிஆர், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய உறுப்பு நாடுகளும், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்தியா, மலேசியா  நாடுகளின் தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான பயங்கரவாதத்திற்கு எதிரான செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 2026-ம் ஆண்டு பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த நிபுணர் குழுவிற்கான பயிற்சி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 2027-ம்  ஆண்டில் இக்குழுவிற்கான களப்பயிற்சி இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிகரித்துவரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான, விரிவான உத்தியை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட  வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆசியான் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகள் மற்றும் அவற்றின் கள அனுபவங்களும் பகிர்ந்து கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113546

***

TS/SV/AG/RR


(Release ID: 2113618) Visitor Counter : 36