WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆன்லைன் விளையாட்டு வடிவமைப்பு மாநாட்டில் இந்தியா முதல் முறையாக பங்கேற்பு

 प्रविष्टि तिथि: 20 MAR 2025 5:54PM |   Location: PIB Chennai

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றுவரும் ஆன்லைன் விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பங்கேற்ற  மாநாட்டில்  இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதர் டாக்டர் கே.ஸ்ரீகர் ரெட்டி இந்திய அரங்கத்தை துணைத் தூதர்  திரு ராகேஷ் அட்லகா, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் என்.எஃப்.டி.சி, டிஜிட்டல் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு தன்மய் சங்கர் ஆகியோர் முன்னிலையில்  திறந்து வைத்தார்.

இம்மாதம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு விளையாட்டு வடிவமைப்பாளர்கள் தொழில் வல்லுநர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் விளையாட்டு வடிவமைப்பு, தொழில்நுட்பம், வர்தத்க சூழல்குள் குறித்த விரிவான விவாதங்கள், கண்காட்சிகள் இடம் பெறுகின்றன.

2025 மே 1 முதல் 4-ம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ள வேவ்ஸ் உச்சி மாநாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்திய அரங்கின் முக்கிய நோக்கமாகும். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டு, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால்  முன்னெடுக்கப்படும் வேவ்ஸ் உச்சிமாநாடு, சர்வதேச அளவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு  தொழில்துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். இது வர்த்தகம், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புகளை ஊக்குவித்து, பொழுதுபோக்குத் துறையில் உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113309

----

TS/SV/KPG/DL


रिलीज़ आईडी: 2113390   |   Visitor Counter: 52

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Telugu , Malayalam