விண்வெளித்துறை
நாடாளுமன்றக் கேள்வி: விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல்
Posted On:
20 MAR 2025 2:52PM by PIB Chennai
கீழ்க்கண்ட நடவடிக்கைகளின் மூலம் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை அரசு ஊக்குவித்து வருகிறது:
1. அரசு சாரா நிறுவனங்கள் முழு விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் விண்வெளித் துறையை தாராளமயமாக்கியது.
2. இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) அரசு சாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், செயல்படுத்தவும், அங்கீகரிக்கவும், மேற்பார்வையிடவும் நிறுவப்பட்டுள்ளது.
3. ஒழுங்குமுறை தெளிவை உறுதி செய்வதற்கும் செழிப்பான விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும் இந்திய விண்வெளி கொள்கை - 2023, விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் எஃப்டிஐ கொள்கை ஆகியவற்றை நிறுவியது.
4. தொழில்நுட்ப ஏற்பு நிதி, விலை ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் விண்வெளியில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை ஆதரிப்பதற்கான தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு சாரா நிறுவனங்களுடன் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு 31.12.2024 நிலவரப்படி இதில் 72 அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
5. அரசு-தனியார் பங்களிப்பு மூலம் புவி கண்காணிப்பு முறையை உருவாக்க இன்-ஸ்பேஸ் செயல்பட்டு வருகிறது.
6. சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.) தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
7. இந்திய நிறுவனங்கள் சுற்றுவட்டப்பாதை வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
8. புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், வரும் நிதியாண்டில் ரூ.1000 கோடி ஆரம்ப கட்ட முதலீட்டு நிதியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2113214)
TS/PKV/RR/KR
(Release ID: 2113241)
Visitor Counter : 28