குடியரசுத் தலைவர் செயலகம்
இதழியலில் சிறந்து விளங்குவோருக்கான ராம்நாத் கோயங்கா விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
19 MAR 2025 7:53PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (மார்ச் 19, 2025) நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இதழியலில் சிறந்து விளங்குவோருக்கான19வது ராம்நாத் கோயங்கா விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஜனநாயகத்தின் நலனிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகவியலின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார்.
செய்தி வர்த்தகத்திற்கு கருத்துக்கள் நிறைந்த செழிப்பான செய்தி அறை அவசியம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். செய்திகளின் தரம் மற்றும் துல்லியத்தை உறுதி செய்ய ஒரு ஆராய்ச்சி பிரிவின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இதழியலின் மையமான செய்தி சேகரிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். களத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஊடக நிறுவனங்கள் அதிக வளங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்பெல்லாம் செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகள் தரமான செய்திகள் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்க முயன்றன என்றும், வாசகர்கள் அவற்றின் பிரதிகளை வாங்கினர் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார். போதுமான வாசகர்களின் எண்ணிக்கை விளம்பரதாரர்களுக்கு ஒரு நல்ல தளமாக இருந்தது, அவர்கள் செலவுகளை மானியமாக வழங்கினர். இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில், இந்த மாதிரி பல கலப்பின மாதிரிகளால் மாற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அவர்களின் வெற்றியை இதழியலின் தரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்தே அளவிட வேண்டும் என்று அவர் கூறினார். அரசு அல்லது பெருநிறுவன நிறுவனங்கள் அல்லது வாசகர் என குறைந்த எண்ணிக்கையிலான நிதி ஆதாரங்கள் மட்டுமே உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். முதல் இரண்டும் அவற்றின் சொந்த நன்மைகள் மற்றும் வரம்புகளைக் கொண்டிருந்தாலும், வாசகரை மையத்தில் வைத்திருப்பதற்கான மூன்றாவது விருப்பம் மிகவும் விரும்பத்தக்கது. இதற்கு ஒரே ஒரு வரம்பு மட்டுமே உள்ளது: அந்த மாதிரியைத் தக்கவைத்துக்கொள்வது கடினமாகத் தெரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2113021
***
RB/DL
(Release ID: 2113071)
Visitor Counter : 23