தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவெக்ஸ் 2025: ஊடக, பொழுதுபோக்கு புத்தொழில் நிறுவனங்களை மாற்றியமைக்கும் நிகழ்வு

Posted On: 18 MAR 2025 6:11PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) வேவெக்ஸ் 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஊடகம்,பொழுதுபோக்கு துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதையும், தேசிய அளவில்  வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும். இந்திய இணையதள மற்றும் கைபேசி சங்கமான ஐஏஎம்ஏஐ- உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேவெக்ஸ் 2025, மும்பையில் 2025 மே 01 முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸின் (WAVES) ஒரு பகுதியாக மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

வேவெக்ஸ் 2025 இந்திய ஊடக புத்தொழில்களுக்கு மாற்றத்தை வழங்கும் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும். அந்த நிறுவனங்கள் தங்கள் வணிகங்களுக்கு முதலீட்டைப் பெறுவதை உறுதி செய்யும். ஊடக, பொழுதுபோக்கு புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை துணிகர முதலீட்டாளர்களிடம் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

வேவெக்ஸ் 2025 கேமிங், அனிமேஷன், மெட்டாவர்ஸ், அடுத்த தலைமுறை உள்ளடக்க தளங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும். நிதியுதவிக்கு அப்பால், இந்த நிகழ்வு வழிகாட்டுதல், முதலீட்டாளர் கட்டமைப்பு, முக்கிய ஊடக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும்.  வேவெக்ஸ் 2025 க்கான விண்ணப்ப நடைமுறைகள் இப்போது தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வு பல கட்ட தேர்வு செயல்முறையைப் பின்பற்றி நடத்தப்படும். விண்ணப்பிப்பதற்கும் மேலும் விவரங்களுக்கும் இந்த இணைய தள இணைப்பைப் பார்க்கலாம்: https://wavex.wavesbazaar.com/

***

(Release ID: 2112412)
PLM/AG/KR


(Release ID: 2112676) Visitor Counter : 26