மக்களவை செயலகம்
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பன்மொழி நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கான 'சன்சத் பாஷினி' தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
18 MAR 2025 8:42PM by PIB Chennai
மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவுத் தீர்வை உருவாக்க மக்களவை செயலகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சன்சத் பாஷினி முன்முயற்சியானது, பன்மொழி ஆதரவு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்கான விரிவான உள்ளக செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்குவதாகும்.
மக்களவை செயலகமும், மின்னணு தொழில் நுட்ப அமைச்சகமும் நாடாளுமன்ற தரவுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி தயாரிப்புகள் / கருவிகளை ஒருங்கிணைத்து கூட்டாக உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன. மொழிபெயர்ப்புத் திறன்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிபுணத்துவம் பாஷினி மூலம் பெறப்படும்.
சன்சாத் பாஷினியின் கீழ் உள்ள முக்கிய செயற்கை நுண்ணறிவு முன்முயற்சிகள்: செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்பு • பாரம்பரிய விவாத ஆவணங்கள், நிகழ்ச்சி நிரல் கோப்புகள், குழு கூட்டங்கள் மற்றும் பிற நாடாளுமன்ற உள்ளடக்கங்களை பிராந்திய மொழிகளில் தடையின்றி மொழிபெயர்ப்பது. • மொழி ரீதியான பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அணுகலை உறுதி செய்தல்.
இதற்கான நிகழ்ச்சியில் மக்களவை செயலாளர் திரு. உத்பல் குமார் சிங் கலந்து கொண்டார். மக்களவை செயலகம் சார்பில் மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் திரு கவுரவ் கோயல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112542
***
TS/IR/RR/KR
(Release ID: 2112651)
Visitor Counter : 22