மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமரின் இளம் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் (யுவா) திட்டம்
Posted On:
18 MAR 2025 3:03PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை ஆகியவை யுவா 3.0 என்று அழைக்கப்படும் பிரதமரின் இளம் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் திட்டத்தின் மூன்றாவது பதிப்பை மார்ச் 11, 2025 அன்று அறிமுகப்படுத்தின. 30 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை வளர்ப்பது, அவர்களை வழிநடத்துவது மற்றும் அவர்களின் படைப்பாற்றல் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கான வெளிப்பாடு ஆகியவற்றை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. யுவா 3.0 அதன் முன்னோடிகளான யுவா 1.0 மற்றும் யுவா 2.0 ஆகியவற்றின் வெற்றியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இலக்கிய திறமைகளை வளர்ப்பதற்கும் இந்தியாவில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் அரசின் உறுதிப்பாட்டைத் தொடர்கிறது. இந்தத் திட்டம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குடன் ஒத்துப்போகிறது, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் பரப்புவதை ஊக்குவிக்கிறது.
தேச நிர்மாணத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு; இந்திய அறிவு முறை; மற்றும் நவீன இந்தியாவின் தயாரிப்பாளர்கள் (1950-2025) ஆகியவை பிரதமரின் இளம் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் திட்டத்தின் கருப்பொருட்களாகும். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்களை உருவாக்க இத்திட்டம் உதவும். மேலும், ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், பண்டைய மற்றும் தற்போதைய காலங்களில் பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறித்த விரிவான கண்ணோட்டத்தை முன்வைப்பதற்கும் இந்தத் திட்டம் ஒரு சாளரத்தை வழங்கும்.
இந்தியாவில் இளம் இலக்கியத் திறனை வளர்ப்பதில் யவா திட்டம் அதன் மூன்று பதிப்புகளின் மூலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்ந்து உருவாகி வருவதால், படைப்பு வெளிப்பாடு, பன்மொழி இலக்கிய பாரம்பரியம் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு மற்றும் எழுதும் கலாச்சாரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் குரல் கொடுத்த இளம் எழுத்தாளர்களின் வெற்றிக் கதைகளில் இத்திட்டத்தின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புதுமையுடன், யுவா திட்டம் இந்தியாவின் இலக்கிய மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112207
***
RB/DL
(Release ID: 2112537)
Visitor Counter : 25