பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பிரதமரின் அனுபவப் பயிற்சித் திட்ட செயலியைத் தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
17 MAR 2025 8:18PM by PIB Chennai
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா முன்னிலையில், இன்று (மார்ச் 17, 2025) பிரதமரின் அனுபவப் பயிற்சித் திட்டத்திற்கான பிரத்யேக கைபேசி செயலியைத் தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக ஐந்து திட்டங்கள் அடங்கிய தொகுப்பை அறிமுகப்படுத்திய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டினார். இந்தத் திட்டத்தில் தொழில்துறை தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் அனுபவப் பயிற்சித் திட்டம், ஐந்து ஆண்டுகளில் முதல் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அனுபவப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சோதனை முயற்சியிலான திட்டத்தின் முதல் சுற்றில் (அக்டோபர் - டிசம்பர் 2024), 25 துறைகளில் 82,000 க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஜனவரி 2025 இல் தொடங்கிய இரண்டாம் சுற்றில் சுமார் 327 நிறுவனங்கள் நாடு முழுவதும் 1.18 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியான இளைஞர்கள் புதிய செல்பேசி செயலி மூலமாகவோ, https://pminternship.mca.gov.in/ என்ற மின் முகவரி வாயிலாகவோ
2025 மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112011
***
SG/AD/RB/DL
(Release ID: 2112050)