பிரதமர் அலுவலகம்
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் ஆழமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்
Posted On:
15 MAR 2025 7:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில், புகழ்பெற்ற போட்காஸ்டரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் உரையாடலை மேற்கொண்டார். மூன்று மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் குழந்தைப் பருவம், இமயமலையில் கழித்த ஆரம்ப ஆண்டுகள், பொது வாழ்க்கையில் அவரது பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற்றன. புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும் போட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் (Lex Fridman) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மூன்று மணி நேர போட்காஸ்ட் நாளை (2025 மார்ச் 16) வெளியிடப்பட உள்ளது. லெக்ஸ் ஃப்ரிட்மேன் இந்த உரையாடலை தமது வாழ்க்கையின் "மிகவும் சக்திவாய்ந்த உரையாடல்களில் ஒன்று" என்று பிரதமர் விவரித்துள்ளார்.
வரவிருக்கும் போட்காஸ்ட் பற்றி லெக்ஸ் ஃப்ரிட்மேனின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது குழந்தைப் பருவம், இமயமலையில் இருந்த ஆண்டுகள், பொது வாழ்க்கைப் பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான ( @lexfridman ) உரையாடல் உண்மையில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலாக அமைந்தது.
அனைவரும் இதைக் கேட்டு, இந்த உரையாடலில் ஒரு அங்கமாக இருங்கள்!"
***
PLM/KV
(Release ID: 2111533)
Visitor Counter : 20