பாதுகாப்பு அமைச்சகம்
அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்
Posted On:
12 MAR 2025 9:29AM by PIB Chennai
புவிசார் நிலப்பரப்பில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள திறன் மேம்பாட்டை விரைவாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை விமானப் படைத் தலைமை தளபதி (சிஏஎஸ்) ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் வலியுறுத்தியுள்ளார். 2025 மார்ச் 11-12 ஆகிய தேதிகளில் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி) 80 வது பணியாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள இந்திய இராணுவத்தின் மாணவ அதிகாரிகளிடையே அவர் உரையாற்றினார். இதில் நிரந்தர ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை மதிப்பிடவும், எதிர்கால மோதல்களுக்கான தகவலமைப்பு உத்திகளை வடிவமைக்கவும் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் அதிகாரிகளை வலியுறுத்தினார். கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், போரின் செயல்திறனை மேம்படுத்த முப்படைகளிடையே ஒருங்கிணைந்த பயிற்சி மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பின் அவசியத்தைக் குறிப்பிட்டார்.
இந்திய விமானப்படையின் தற்போதைய திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் நவீன போரில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படை வீரர்களின் சாதனைகள், மீட்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நவீன ராணுவ தயார்நிலையின் முக்கிய அம்சமான ஆயுதப்படைகளிடையே கூட்டு முயற்சியை வளர்ப்பதில் அதன் முக்கியத்துவம் குறித்தும் விமானப்படை தலைமை தளபதி விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110603
***
TS/IR/RR/KR
(Release ID: 2110666)
Visitor Counter : 28