வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆஹார் 2025-ன் 39-வது கண்காட்சியில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டது
Posted On:
11 MAR 2025 12:18PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2025 மார்ச் 4 முதல் 8 வரை இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆஹார் 2025-ன் 39-வது கண்காட்சியில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சிறப்புகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) வெளிப்படுத்தியது.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட 95 அமைப்புகளைச் சேர்ந்த காட்சிப்படுத்துவோர் அரங்குகளை அமைத்திருந்தனர்.
இந்தக் கண்காட்சியை மத்திய உணவு பதனத் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் தொழில்துறை தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். அபெடா அரங்கை அதன் தலைவர் திரு அபிஷேக் தேவ் திறந்துவைத்தார். இந்தியாவின் ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியதோடு, உலகளாவிய உணவு சந்தைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் செல்வாக்கையும், எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110129
***
TS/SMB/AG/KR
(Release ID: 2110182)
Visitor Counter : 19