தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏவிஜிசி-எக்ஸ் ஆர் திறனில் முன்னிலை வகித்தல்

Posted On: 10 MAR 2025 2:03PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கத்தின் இந்திய பிரிவால் சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்கும் போட்டி தொழில்முறையாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்காக நடத்தப்படுகிறது. ரீல்ஸ், விளம்பர திரைப்படம் ஆகியவற்றுக்காக அனிமேஷன், கேமிங், விஎஃப்எக்ஸ் மற்றும் இவை சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

படைப்புகளை சமர்ப்பிக்க 28.2.2025 கடைசி நாளாக இருந்த நிலையில், இதுவரை 1,276 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த படைப்புகள் 9.3.2025 முதல் 29.3.2025 வரை நடுவர்களால் பரிசீலிக்கப்படும். இறுதி முடிவுகள் 1.4.2025 அன்று வெளியிடப்படும்.

2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் ஜியோ உலக மையத்தில் நடைபெறவுள்ள உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநட்டில் (வேவ்ஸ்) வெற்றியாளர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். பரிசு பெறுவோருக்கு போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஆகியவையும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109809

 

TS/SMB/LDN/KR

***


(Release ID: 2110071) Visitor Counter : 7