குடியரசுத் தலைவர் செயலகம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
07 MAR 2025 7:04PM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்கள் சக்தியின் சாதனைகளையும், நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர்களின் தனித்துவமான பங்களிப்பையும் கௌரவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். பெண்கள்தான் நமது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் அடித்தளம். துன்பங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்ட போதிலும், பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் அடையாளங்களை வெற்றிகரமாக செதுக்கியுள்ளனர்.
இருப்பினும், பெண்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த மேலும் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணர்வதற்கும், முன்னேறிச் செல்ல சம வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உகந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அனைத்து பெண் சாதனையாளர்களுக்கும் வாழ்த்துகள். அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைந்திட விழைகிறேன்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109202
***
RB/DL
(Release ID: 2109242)
Visitor Counter : 31