தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மின்னணு இசையமைப்பாளர்கள் மற்றும் டிஸ்க் ஜாக்கிகள் கவனத்திற்கு : வேவ்ஸ் 2025 இசைப் போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி வாய்ப்பு
Posted On:
05 MAR 2025 4:26PM by PIB Chennai
உலக ஒலி மற்றும் ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025, ஆர்வமுள்ள டி.ஜே.க்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் மின்னணு இசைக் கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது. நீங்கள் ஒரு மின்னணு இசையை உருவாக்குபவராக இருந்தால், டி.ஜே.வாக ஆர்வம் இருந்தால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய இறுதி வாய்ப்பாகஉலக ஒலி மற்றும் ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025 இருக்கிறது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய இசைத் துறையுடன் இணைந்து இந்த சவால் போட்டிக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உலகில் உங்கள் படைப்பு திறமைகளையும் புதுமைகளையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. மின்னணு இசை மற்றும் நடனத்தை உருவாக்கி தயாரிப்பதில் முன் அனுபவமுள்ள எந்தவொரு நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்களும் இந்த சவால் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறும் இந்த சவாலின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் முதல் பத்து பேர் இசைத் துறையின் அனைத்து கலைஞர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை இது வழங்குகிறது.
கூடுதல் விவரங்களுக்கு wavesatinfo@indianmi.org மூலம் தொடர்புக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108493
***
TS/GK/RJ/DL
(Release ID: 2108612)
Visitor Counter : 25