பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் முதல் கேதார்நாத் (12.9 கிலோமீட்டர்) வரை கேபிள் கார் வசதி ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 05 MAR 2025 3:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் முதல் கேதார்நாத் வரை  12.9 கிலோமீட்டர் நீளமுள்ள கேபிள் கார் (ரோப்வே) திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.4,081.28 கோடி மூலதன செலவில் வடிவமைத்தல், கட்டுமானம், நிதி, செயல்பாடுகள், ஒப்படைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும்.

ரோப்வே திட்டத்தை பொதுத்துறை, தனியார் துறை  கூட்டமைப்பில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த ரோப்வே திட்டம், நாள் ஒன்றுக்கு 18,000 பயணிகளையும் ஒரு மணி நேரத்திற்கு 1,800 பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாகும்.

ரோப்வே திட்டம் கேதார்நாத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த, வசதியான, விரைவான போக்குவரத்து இணைப்பை வழங்குவதுடன், பயண நேரத்தை சுமார் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 36 நிமிடங்களாகக் குறைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108412

 

-----

TS/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2108527) आगंतुक पटल : 80
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada