பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மேதகு திரு கிறிஸ்டியன் ஸ்டோக்கருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
04 MAR 2025 11:47AM by PIB Chennai
ஆஸ்திரிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மேதகு திரு கிறிஸ்டியன் ஸ்டோக்கருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரியாவுக்கு இடையிலான மேம்பட்ட கூட்டாண்மை வரும் ஆண்டுகளில் சீரான முன்னேற்றத்திற்குத் தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"ஆஸ்திரிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மேதகு திரு கிறிஸ்டியன் ஸ்டோக்கருக்கு அன்பான வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியா-ஆஸ்திரியாவுக்கு இடையிலான மேம்பட்ட கூட்டாண்மை சீரான முன்னேற்றத்திற்குத் தயாராக உள்ளது. பரஸ்பரம் பயன்தரும் நமது ஒத்துழைப்பை முன்னெப்போதும் இல்லாத உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். @_CStocker"
***
(Release ID: 2107979)
TS/SMB/AG/RR
(Release ID: 2108041)
Visitor Counter : 21
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam