பிரதமர் அலுவலகம்
வனஉயிரினப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
03 MAR 2025 7:14PM by PIB Chennai
வன உயிரின பாதுகாப்பில் நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது வனவிலங்குகளை நாம் எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறோம் என்பதையும், விலங்குகளுக்கு நிலையான வாழ்விடங்களை உருவாக்க உழைத்து வருகிறோம் என்பதையும் குறிக்கிறது. #உலக வனஉயிரின தினம்"
-----
(Release ID: 2107674)
TS/SMB/LDN/DL
(रिलीज़ आईडी: 2107884)
आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam