பாதுகாப்பு அமைச்சகம்
டெசர்ட் ஹண்ட் போர்ப் பயிற்சி 2025
प्रविष्टि तिथि:
01 MAR 2025 9:50AM by PIB Chennai
2025 பிப்ரவரி 24 முதல் 28 வரை ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையால் "எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025" என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகள், இந்திய கடற்படையின் கமாண்டோக்கள், இந்திய விமானப்படையின் கருட் சிறப்புப் படையினர் இணைந்து பங்கேற்றனர்.
பாதுகாப்பு சவால்களை எதிர்த்து விரைவான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக மூன்று சிறப்புப் படை பிரிவுகளிடையே செயல்திறன், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சியில் வான்வழி நடவடிக்கைகள், துல்லி தாக்குதல்கள், பிணைக் கைதிகள் மீட்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடைமுறைகள் அடங்கும். இதில் படைகளின் போர் தயார்நிலையும் சோதிக்கப்பட்டது.
மூத்த அதிகாரிகள் பயிற்சியை மேற்பார்வையிட்டனர். மேலும், முப்படைகளுக்கு இடையேயான தடையற்ற ஒத்துழைப்பு மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு தளத்தை இது வழங்கியது.
***
PLM/KV
(रिलीज़ आईडी: 2107199)
आगंतुक पटल : 107