குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 27 FEB 2025 7:24PM by PIB Chennai

அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (27.02.2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், நம்மைச் சுற்றி பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றில் பலவற்றுக்கு வடிவமைப்பில் மாற்றங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன என்றும், அதற்காக ஆதார வளங்கள் கூடுதலாகத் தேவை இல்லை என்றும் கூறினார். ஆக்கப்பூர்வமான சிந்தனையானது வாழ்வியல் முறையை எளிதாக்கி தீர்வுகள் காண வழிவகுக்கும் என்றும் குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, பொருளாதார வளர்ச்சி அடைய   வடிவமைப்புத்துறை வளர்ச்சி அடையவேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய வடிவமைப்பு நிறுவனம் 'சமூக மேம்பாட்டுக்கான சேவையாக வடிவமைப்பு' உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதற்கு அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

நாட்டில் வடிவமைப்பு என்பது அனைத்து சமூகங்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளதுடன் பாரம்பரியம் மிக்கதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார். வடிவமைப்பு தொடர்பான செயல்முறைகளை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாட்டின் கலாச்சார நடைமுறைகள் 21-ம் நூற்றாண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கான தீர்வுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, நாட்டின் வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து பெறப்பட்ட வரலாற்று ரீதியான தீர்வுகளுக்கு புத்துயிர் அளிப்பதும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவற்றை பயன்படுத்துவதும் நாட்டிற்கு பயனளிப்பதாக மட்டுமின்றி  உலக அளவில் முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

நேர்மறையான சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைப்புத் துறையின் வலிமையை துறை சார்ந்த  பிரதிநிதிகள் நிரூபித்துள்ளதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். அவர்கள் சமூகத்தில் பயனுள்ள வகையில் வடிவமைப்பு தொடர்பான செயல்முறைகளை மேற்கொள்வதாக அவர் கூறினார். சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் துப்புரவு போன்ற துறைகளில் முன்னேற்றங்களைக் கொண்டு வருவதாக  அவர் தெரிவித்தார்.

-----

TS/SV/KPG/DL


(Release ID: 2106736) Visitor Counter : 25