தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கதர் ஆடையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்கான பிரச்சாரம்

Posted On: 27 FEB 2025 4:40PM by PIB Chennai

காதி நிறுவனம் கதர் ஆடை  அணியும் பழக்கத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் "உலகை காதி அணியச் செய்வோம்" பிரச்சாரம் நாட்டின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை உலகளவில் ஆடை வடிவமைப்புகளுக்கான தற்போதைய கலாச்சாரத்துடன் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் விளம்பரத்துறையினர் மற்றும் தனிப்பட்ட முறையில் தொழிலில்  ஈடுபட்டுள்ளவர்களுக்கு சவாலாக இருக்கும். வேவ்ஸ் எனப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி புதுமையான விளம்பரங்கள் மூலம் கதர் ஆடையை உலகம் முழுவதிலும் அனைவராலும் விரும்பி அணியும் வகையில், வர்த்தக முத்திரையுடன் நிலை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய விளம்பர முகவர் சங்கம்  ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டிகள் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் இருந்து பங்கேற்பாளர்களை டிஜிட்டல், அச்சு ஊடகம், வீடியோ, அனுபவ வடிவங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களை உருவாக்க அழைக்கிறது. சிந்தனைத் திறன், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகிற்கான கதர் ஆடை என்ற வர்த்தக முத்திரையை மேம்படுத்தவும், நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் உலகளவிலான புதிய யோசனைகளை முன்வைக்க ஊக்குவிக்கிறது.

மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மாநாட்டு மையத்தில் 2025 மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. வேவ்ஸ் மாநாடு ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் நான்கு பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த மாநாட்டில் உலகை கதர் ஆடையை அணியச் செய்வோம் என்ற பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில், துறை சார்ந்த விளம்பர நிபுணர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு அவர்களது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106626  

----

TS/SV/KPG/DL


(Release ID: 2106734) Visitor Counter : 20