தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக வானொலி நிகழ்ச்சி உள்ளடக்கத்துக்கான சவால்

Posted On: 27 FEB 2025 4:34PM by PIB Chennai

சமூக வானொலியில்  ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் மற்றும் புதுமையான நிகழ்ச்சிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் மண்டல ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் சமூக வானொலியின் பங்களிப்பு உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சமூக வானொலி சங்கம்  ஆகியவை இணைந்து, வேவ்ஸ் தளத்தில் முதல் கட்ட போட்டிகளை நடத்துகின்றன. இதுவரை 14 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 246 பேர் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ளனர்.

முதலாவது உலக ஒலி -ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் தனித்துவ மையமாக இந்த தளம் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் முதலாவது மாநாடு இதுவாகும். சர்வதேச அளவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறை நிறுவனங்கள்  இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஊக்குவிக்கிறது.

இந்த உச்சி மாநாடு 2025 மே 1 முதல் 4-ம் தேதி வரை மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறும். ஒலிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு, ஏவிஜிசி-எக்ஸ்ஆர், டிஜிட்டல் மீடியா & புதிய கண்டுபிடிப்பு மற்றும் திரைப்படம் ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நாட்டின் பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் பிரகாசமாக வளர்ச்சியடைய உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106623

---

TS/SV/KPG/DL


(Release ID: 2106725) Visitor Counter : 17