தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி விவேகானந்தா தொழில் கல்வி நிறுவனத்தில் வேவ்ஸ் உச்சி மாநாடு தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted On: 18 FEB 2025 5:31PM by PIB Chennai

 

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் சபைகளின் கூட்டமைப்பானது நெட்பிளிக்சுடன் இணைந்து வேவ்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக  இந்தியாவில் உருவாக்குங்கள் சவாலை நடத்துகிறது. 

இதன் ஒரு பகுதியாக  மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்வு, இன்று (18.02.2025) புதுதில்லியில் உள்ள விவேகானந்தா தொழில்கல்வி நிறுவனத்தில் (VIPS) நடைபெற்றது. இந்த நிகழ்வு, திரைப்படத் தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஆர்வமுள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தது.

அடோப் பிரீமியர் ப்ரோவைப் பயன்படுத்தி வீடியோ தொகுப்பு செய்வது குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கப்பட்டது. இந்த அமர்வில், முன்னோட்ட காட்சி உருவாக்கம், டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்புக்கான நுட்பங்கள் போன்றவை குறித்த அடிப்படைகளை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது.

***

TS/PLM/AG/KV

 

 


(Release ID: 2104480) Visitor Counter : 22