தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் அனிமேஷன் மற்றும் மங்கா போட்டிகள்
प्रविष्टि तिथि:
17 FEB 2025 5:23PM by PIB Chennai
படைப்பாளிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக வேவ்ஸ் அனிமேஷன் மற்றும் மங்கா போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்தின் ஒத்துழைப்புடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களைக் கவனத்தில் கொண்டு பிரபலமான ஜப்பானிய முறைகளில் படைப்புகளை உருவாக்க கலைஞர்களுக்கு இந்தப் போட்டிகள் ஊக்கமளிக்கின்றன.
நாடு முழுவதும் 11 நகரங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, தேசிய அளவிலான இறுதிப் போட்டிகள் - வேவ்ஸ் 2025 மும்பையில் நடைபெறும். இந்தப் போட்டிகள் ஜியோ உலக மாநாட்டு மையம், ஜியோ உலக பூங்காக்களில் 2025 மே -1 முதல் 4 வரை நடைபெறவுள்ள உலக ஒலி,ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளில் அனைத்து வகைப்பாட்டிலும் பங்கேற்போருக்கு கதைச் சுருக்கப் பிரதி (ஸ்கிரிப்ட்) போட்டி நடைபெறும் இடத்தில் அளிக்கப்படும்.
மங்கா வகை போட்டிக்கு எழுதப்பட்ட வடிவத்திலும் மற்றவகைப் போட்டிகளுக்கு டிஜிட்டல் முறையிலும் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்பை குறிப்பிட்ட கால அளவுக்குள் உருவாக்கி தர வேண்டும்.
மங்கா (மாணவர்கள் மற்றும் தொழில்முறையாளர்கள்) – மை மற்றும் வண்ணத்தில் குறைந்தபட்சம் ஒவ்வொன்றும் நான்கு பேனல்கள் கொண்ட இரண்டு பக்கங்களை (காகித எழுத்து / டிஜிட்டல் வடிவம்) சமர்ப்பிக்க வேண்டும்.
வெப்டூன் (மாணவர்கள்) – மை மற்றும் வண்ணத்தில் ஏழு பேனல்கள்
வெப்டூன் (தொழில் முறையாளர்கள்) - மை மற்றும் வண்ணத்தில் பத்து பேனல்கள்
அனிமேஷன் (மாணவர்கள்) – வழங்கப்பட்ட கதைச் சுருக்கம் அடிப்படையில் 10 நிமிட அனிமேஷன் தயாரிப்பு
அனிமேஷன் (தொழில்முறையாளர்கள்) - வழங்கப்பட்ட கதைச் சுருக்கம் அடிப்படையில் 15 நிமிட அனிமேஷன் தயாரிப்பு.
அனைத்துப் போட்டிகளும் நேரடியாக நடைபெறும்.
காலை 9 மணிக்கு பதிவு தொடங்கும்.
காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும்
ஒப்பனையுடனான போட்டிகளும் மற்றவையும் அதேநாளில் மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறும்.
வெற்றி பெற்றவர்கள் ஜப்பான் அனிமேஷன் மற்றும் இதர சர்வதேச நிகழ்வுகளுக்கு செல்வதற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உதவியுடன் செலவுத்தொகை பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104113
***
TS/SMB/RJ/DL
(रिलीज़ आईडी: 2104173)
आगंतुक पटल : 78