தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற அனைத்து வகை இசைக்குழுவினருக்கும் வாய்ப்பு
प्रविष्टि तिथि:
13 FEB 2025 6:18PM
|
Location:
PIB Chennai
இசை மூலம் பிரபலமாக விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பை வேவ்ஸ் போட்டி வழங்குகிறது. உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு மே 1 முதல் மே 4 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தூர்தர்ஷன் மற்றும் வேவ்ஸ் அமைப்பு சார்பில் மும்பையில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து இசைக்குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கான பதிவுகள் விரைவில் தொடங்க உள்ளன.
இந்தப் போட்டிகளின் முடிவில் 13 சர்வதேச இசைக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள இந்தி திரைப்பட இசை, பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற இசைப் பாடல்களைப் பாடத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்த இசைக்குழுக்களை வைத்திருப்பவர்கள் பதிவு செய்யலாம்.
இந்த நிகழ்வு பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் பல்வேறு வகைகளை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும்.
மேலும் தகவல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு www.wavesindia.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
***
TS/GK/RR/KR
रिलीज़ आईडी:
2103265
| Visitor Counter:
68