நிதி அமைச்சகம்
வருமான வரிச் சட்டம் -1961-ஐ எளிமைப்படுத்தும் வகையில், வருமான வரிச் சட்ட மசோதா-2025 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
Posted On:
13 FEB 2025 3:54PM by PIB Chennai
வருமான வரி மசோதா, 2025 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது.
மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:
1. தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
2. வருமான வரிச் சட்டத்தின் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில் வரிக் கொள்கைகளில் எவ்வித முக்கிய மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை
3. வரி செலுத்துவோருக்கு முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் வகையில், வரி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும்
மும்முனை அணுகுமுறையுடன் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
வாசிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிக்கலான மொழிநடை தவிர்க்கப்பட்டுள்ளது.
எளிதில் கண்டறிய வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ள விதிப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க வசதியாக இருக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் தர்க்க ரீதியாக மறுசீரமைக்கப்படடுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102744
*****
TS/SV/RJ/KR
(Release ID: 2102818)
Visitor Counter : 67
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Telugu