பாதுகாப்பு அமைச்சகம்
ஏரோ இந்தியா கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர் பல்வேறு நாடுகளின் துறை சார்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்
प्रविष्टि तिथि:
12 FEB 2025 8:00AM by PIB Chennai
2025 பிப்ரவரி 11-ம் தேதி பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியையொட்டி பாதுகாப்பு செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறைச் செயலாளர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார். மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் திரு காசிமிரோ அகஸ்டோ முயியோவை சந்தித்துப் பேசினார். இலங்கை விமானப்படை வைஸ் மார்ஷல் (ஓய்வு) திரு சம்பத் துயகோந்த, சூரினாம் நாட்டின் பாதுகாப்புத் துறை நிரந்தர செயலாளர், திரு ஜெயந்த்குமார் பிடேஸி, மங்கோலியாவின் பிரிகேடியர் ஜெனரல் திரு கன்காயுக் தேக்வடோர்ஜ், நேபாளத்தின் பாதுகாப்புத் துறை செயலர் திரு ரமேஷ்வர் தங்கல், மொரீஷியஸ் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு தேவேந்திர கோபால் மற்றும் காங்கோ குடியரசின் நிரந்தர செயலாளர் மேஜர் ஜெனரல் லுக்விகிலா மெடிக்விசா மார்செல் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பரஸ்பரம் நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
**
(Release ID: 2102070)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2102268)
आगंतुक पटल : 65