மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள தென் கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் கோட்ட அதிகார வரம்பை துண்டிக்கப்பட்ட வால்டேர் கோட்டத்தை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் திருத்தியமைத்தல்

Posted On: 07 FEB 2025 8:46PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்டவற்றுக்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது:

i. வால்டேர் கோட்டத்தை துண்டிக்கப்பட்ட வடிவில் தக்க வைத்துக் கொள்ளவும், விசாகப்பட்டினம் கோட்டம் என்று பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவை 28.02.2019 அன்று எடுத்த முந்தைய முடிவின் பகுதி மாற்றம்.

ii. பலாசா-விசாகப்பட்டினம்-துவ்வாடா, குனேரு-விஜயநகரம், நௌபடா சந்திப்பு - பரலகேமுண்டி, பொப்பிலி சந்திப்பு - சலூர், சிம்ஹாச்சலம் வடக்கு - துவ்வாடா புறவழிச்சாலை, வடாளப்புடி - துவ்வாடா மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை - ஜக்கயபாலம் (சுமார் 410 கி.மீ) ஆகிய நிலையங்களுக்கு இடையே  வால்டேர் கோட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய பிரிவுகள், புதிய தென் கடற்கரை ரயில்வேயின் கீழ் வால்டேர் பிரிவாக தக்கவைக்கப்படும். வால்டேர் என்ற பெயர் மாற்றப்பட வேண்டிய ஒரு காலனித்துவ மரபு என்பதால் இது விசாகப்பட்டினம் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.

iii. கோட்டவலசா - பாச்சேலி, குனேரு - தெருவாலி சந்திப்பு, சிங்கப்பூர் சாலை - கோராபுட் சந்திப்பு மற்றும் பரலகேமுண்டி - குன்பூர் (சுமார் 680 கி.மீ) நிலையங்களுக்கு இடையிலான பிரிவுகளை உள்ளடக்கிய வால்டேர் பிரிவின் மற்றொரு பகுதி, கிழக்கு கடற்கரை ரயில்வேயின் கீழ் ராயகடாவில் தலைமையிடத்துடன் ஒரு புதிய கோட்டமாக மாற்றப்படும்.

 

வால்டேர் பிரிவை அதன் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட தக்க வைத்துக் கொண்டால், அப்பகுதி மக்களின் தேவை மற்றும் லட்சியங்கள் பூர்த்தியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100853

 

 

***

RB/DL


(Release ID: 2100892) Visitor Counter : 22