தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் படக்கதைப் படைப்பாளர்களுக்கான சாம்பியன் போட்டி
Posted On:
07 FEB 2025 6:01PM by PIB Chennai
படக்கதை படைப்பாளர்களுக்கான போட்டி (காமிக்ஸ் கிரியேட்டர்)வேவ்ஸ் உச்சிமாநாட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்தப் போட்டி மூலம் இந்தியாவின் படக்கதை புத்தகம் வெளியிடும் தொழில் மேம்படும். இந்தப் போட்டிகள் பொழுதுபோக்கு மற்றும் தொழில்முறை வகைப்பாடுகளில் 3 நிலைகளில் நடத்தப்படுகின்றன. உலக அளவில் வளர்ந்து வரும் படக்கதைப் படைப்பாளர்களின் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒரு வரலாற்று நிகழ்வாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இந்திய படக்கதை சங்கத்துடன் இணைந்து 30 ஆண்டு காலமாகப் படக்கதை புத்தகங்கள் வெளியிடப்படுவதைக் குறிக்கும் வகையில், இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.
இந்தியாவில் படைப்பாற்றல் குறித்த சவால்களின் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 70,000 பதிவுகளுடன் 31 வகையான போட்டிகளை நடத்தும் முன்னோடி முயற்சியாக இது அமைந்துள்ளது. உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் முக்கிய அம்சமாக இந்தப் போட்டிகள் இடம் பெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100737
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2100825)