தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அஞ்சல் சேமிப்பு கணக்கை அதன் பல்வேறு கணக்குகளுடன் இணைப்பதற்கு இந்தியா அஞ்சலக வங்கி, நடவடிக்கை
Posted On:
06 FEB 2025 3:11PM by PIB Chennai
இந்தியா அஞ்சலக வங்கி (ஐபிபிபீ) நாடு முழுவதும் 650 கிளைகளையும் 1.63 லட்சத்திற்கும் மேற்பட்ட அணுகல் மையங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக குஷிநகர் மாவட்டத்தில் ஒரு கிளையும் 224 அணுகல் மையங்களும் உள்ளன.
சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், டெபிட் கார்டு, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள், காப்பீட்டுச் சேவைகள், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ், ஆதாரில் மொபைல் எண் புதுப்பித்தல் மற்றும் குழந்தை உள்பட பயனாளி இணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் மற்றும் ஆதார் தொடர்பான சேவைகளை வீட்டில் இருந்தபடியே பயனாளிகள் பெற தபால்காரர்கள் மற்றும் கிராமப்புற சேவகர்கள் மூலம் இந்தியா அஞ்சலக வங்கி உதவுகிறது.
பொதுமக்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்தச் சேவைகளை வழங்க மாநில அளவில் பல்வேறு துறைகளுடன் இது இணைந்துள்ளது.
31.12.2024 நிலவரப்படி, இந்தியா அஞ்சலக வங்கியில் ஆதார் இணைக்கப்பட்ட 7.03 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 7.68 கோடி வாடிக்கையாளர்களின் ஆதாரில் மொபைல் எண்கள் புதுப்பிப்பிக்கப்பட்டுள்ளன.
81.17 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு குழந்தைச் சேர்க்கை சேவைகளை வழங்கியுள்ளது. ஓய்வூதியம் பெறும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் மாநிலங்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100235
***
TS/GK/KPG/RR
(Release ID: 2100342)
Visitor Counter : 37