உள்துறை அமைச்சகம்
திரிபுராஅரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
05 FEB 2025 7:43PM by PIB Chennai
திரிபுரா அரசால் 2,800-க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை காணொலிக்காட்சியாக வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் ஒரு கட்சியின் பணியாளர்களுக்கு மட்டுமே திரிபுராவில் பணிகள் கிடைத்தன என்றும், தற்போது திரிபுரா அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த பாகுபாடும், பரிந்துரையும் அல்லது ஊழலும் இல்லாமல் பணிகளை வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். தற்போதைய திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா, தற்போது எந்த பாகுபாடும், பாரபட்சமும் அல்லது ஊழலும் இல்லாமல், முழு வெளிப்படைத்தன்மையுடன், மாநிலத்தின் 2807 இளைஞர்களுக்கு அரசு பணிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். இந்த வாய்ப்பு அவர்களை திரிபுராவின் வளர்ச்சியுடன் இணைத்துள்ளது. தற்போது 2437 பல்துறை சேவை பணியாளர் பதவிகள் மற்றும் சுகாதாரத் துறையில் 370 பதவிகளுக்கான நியமனங்கள் மூலம், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர் என்று திரு ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100120
***
TS/IR/RJ/DL
(Release ID: 2100127)
Visitor Counter : 26