இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு இளையோர் சக்தியைப் பயன்படுத்துதல்
Posted On:
03 FEB 2025 1:41PM by PIB Chennai
இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் திறனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மத்திய இளையோர் விவகாரத் துறையானது நிர்வாகத்திறன் மற்றும் நாட்டைக் கட்டமைத்தல் ஆகிய இரண்டு குறிக்கோள்களுடன் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கள அமைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் நாட்டைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த முடியும்.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் தன்னார்வ அடிப்படையில் சமூக சேவைகள் வாயிலாக மாணவர்களின் ஆளுமைத்திறன் மற்றும் குணநலன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேவை மூலம் கல்வி என்ற அடிப்படையில் நாட்டு நலப்பணித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று, நேரு யுவ கேந்திரா சங்கதன், அதன் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சமூகப் பணியில் ஈடுபடுத்தும் வகையில் அவர்களை சென்றடைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099075
***
TS/SV/RJ/KR
(Release ID: 2099109)
Visitor Counter : 20