நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்வு : பட்ஜெட்டில் அறிவிப்பு

Posted On: 01 FEB 2025 1:21PM by PIB Chennai

உலகளாவிய போட்டிக்கு இணையாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சித் திறனை அதிகரிக்கும் ஆறு களங்களில் மாற்றத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வருவதை மத்திய பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், நிதித்துறையுடன் உள்ளடக்கிய காப்பீடு, ஓய்வூதியம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட துறைகள் இந்த களங்களில் ஒன்றாகும் என தெரிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு

காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் முழு அளவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கே இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு முதலீட்டுடன் தொடர்புடைய தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதிய தயாரிப்புகளுக்காக ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு மன்றம் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அறிவிப்புகளை செயல்படுத்த KYC செயல்முறையை எளிமைப்படுத்துவது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட மத்திய KYC பதிவேடு வெளியிடப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் அவ்வப்போது KYCயை புதுப்பிப்பதற்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட அமைப்பும் செயல்படுத்தப்படும் என்றார்.

நிறுவனங்கள் இணைப்புக்கு விரைவான ஒப்புதல் வழங்குவதற்கான தேவைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், உடனடி இணைப்புகளுக்கான வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டு செயல்முறை எளிமைப்படுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

இந்தியா மேம்படுத்துவதற்கே முதல் முன்னுரிமை என்ற உணர்வின் அடிப்படையில், நிலையான வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், தற்போதைய மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098394

***

PKV/GK /RJ/KR


(Release ID: 2098688) Visitor Counter : 20