நிதி அமைச்சகம்
இந்தியாவில் உற்பத்தி செய்வதை மேலும் அதிகரிக்க சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களை ஊக்குவிக்கும் "தேசிய உற்பத்தி இயக்கம்" பட்ஜெட்டில் அறிவிப்பு
Posted On:
01 FEB 2025 1:19PM by PIB Chennai
"மேக் இன் இந்தியா" எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தை மேம்படுத்துவதற்காக சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு மேலும் உதவும் வகையில் "தேசிய உற்பத்தி இயக்கம்" ஒன்றை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்தார். இது மத்திய அமைச்சகங்களுக்கும் மாநிலங்களுக்கும் கொள்கை ஆதரவு, செயல்படுத்தல், வழிகாட்டுதல்கள், நிர்வாகம், கண்காணிப்பு ஆகியவற்றை வழங்கும்.
தேசிய உற்பத்தி இயக்கம் ஐந்து முக்கிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும். அதாவது வணிகம் செய்வதில் எளிமை மற்றும் செலவு சிக்கனம், , எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயாராக இருக்கும் பணியாளர்கள்; துடிப்பான குறு, சிறு, நடுத்தர தொழில் துறை; தொழில்நுட்பங்கள் தேவைப்படும் அளவில் கிடைத்தல், தரமான பொருட்கள் ஆகியவை அந்த ஐந்து அம்சங்களாகும்.
இந்தியாவின் காலணி, தோல் துறையின் உற்பத்தித்திறன், தரம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும், ரூ. 4 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என்றும், ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொம்மைகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098392
*******************
TS/PLM/RR/KR
(Release ID: 2098518)
Visitor Counter : 22