நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொருளாதாரத்தில் முதலீடு என்னும் 3வது எஞ்ஜினின் ஒரு பகுதியாக, பொது - தனியார் கூட்டாண்மைகள், மாநிலங்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Posted On: 01 FEB 2025 1:06PM by PIB Chennai

பொருளாதாரத்தில் முதலீடு என்னும் 3வது எஞ்ஜினின் ஒரு பகுதியாக, ​​பொது - தனியார் கூட்டாண்மை, மாநிலங்களுக்கான ஆதரவு, 2025-2030-ம் ஆண்டுக்கான சொத்து பணமாக்குதல் திட்டம், சுரங்கத் துறை மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு துறை சீர்திருத்தங்களை மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு தொடர்பான ஒவ்வொரு அமைச்சகமும் 3 ஆண்டு காலகட்டத்துக்கான ஒரு திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தும் என்றும், இந்திய உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிதி திட்டத்தைத் தொடங்கவும், அதன் ஆதரவைப் பெறவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காகவும், சீர்திருத்தங்களுக்கான ஊக்கத்தொகைகளுக்காகவும் 50 ஆண்டு வட்டியில்லாக் கடன்களுக்காக ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீட்டை மத்திய நிதியமைச்சர் முன்மொழிந்தார்.

2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முதல் சொத்து பணமாக்குதல் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புதிய திட்டங்களில் ரூ.10 லட்சம் கோடி மூலதனத்தைத் திரட்டவும், இத்திட்டத்தை ஆதரிப்பதற்காக ஒழுங்குமுறை மற்றும் நிதி நடவடிக்கைகளைச் செம்மைப்படுத்தவும், 2025-30-ம் ஆண்டிற்கான இரண்டாவது திட்டத்தை அவர் முன்மொழிந்தார்.

சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், மாநில சுரங்கக் குறியீட்டை நிறுவுவதன் மூலமும், சிறு கனிமங்கள் உட்பட சுரங்கத் துறை சீர்திருத்தங்களை மத்திய நிதியமைச்சர் முன்மொழிந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098376

***

(Release ID: 2098376)
TS/PKV/RR/KR


(Release ID: 2098494) Visitor Counter : 68