நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் இளமையான, திறன் வாய்ந்த மற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி பணி உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் - பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 2:09PM by PIB Chennai

புதிய யுகத்தில் நாட்டின் பல்வேறு துறைகளில் தானியங்கி முறையில் பொருளாதார மதிப்புமிக்க பெரும்பான்மைப் பணிகளை மேற்கொள்ள செய்வதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் . இதனால் நடுத்தர மற்றும் கடை நிலைப் பணிகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளியேற வேண்டி இருக்கும்.

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் திரு ஆண்ட்ரூ ஹால்டேன் கூற்றுப்படி ஏற்கனவே  தொழில் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி கடினமானதாகவும், பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கக்கூடியதாகவும் வருவாய் சமநிலையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் கொள்கை வகுப்பாளர்கள் பணிச்சூழல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாட்டின் சேவைத்துறை முக்கியத்துவம் பெற்ற துறையாக உள்ளது . தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள்  குறைந்த மதிப்புக்கூட்டல் உள்ள சேவைகளில் ஈடுபட்டு உள்ளனர். தானியங்கி முறையால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  தொழிலாளர்களுக்கு மாற்றாக  தொழில்நுட்பங்களை புகுத்துவதன் மூலம்  நிறுவனங்கள் செலவுகளை வெகுவாக குறைக்கக்கூடும்.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்பகத்தன்மையுடன், பெருமளவிலான பணிகளை திறமையாக கையாள முடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பணிகள் அனைத்தும் நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்வதன் மூலம் மனித ஆற்றலுடன் எந்திரங்களின் திறனையும் ஒருங்கிணைக்க முடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு துறை சார்ந்த நிபுணர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் தொழிலாளர் சந்தையில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கிறது. நாட்டின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பெருநிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097907  

-----

PKV/SV/KPG/DL


(Release ID: 2098285) Visitor Counter : 9