நிதி அமைச்சகம்
2015, 2022 நிதியாண்டுகளுக்கு இடையே மொத்த சுகாதார செலவு 29%-லிருந்து 48%-மாக உயர்ந்துள்ளது: பொருளாதார ஆய்வறிக்கை
Posted On:
31 JAN 2025 1:36PM by PIB Chennai
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உத்தி அனைத்து மக்களின் நலனையும் உள்ளடக்கியதாகும். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் மக்களை அதிகாரபடுத்துவதில் அரசின் கவனம் உள்ளது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா எனும் மத்திய அரசின் தொலைநோக்குக்கு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மையப்புள்ளியாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது;
மொத்த சுகாதார செலவில் அரசின் பங்கு வெகுவாக அதிகரித்துள்ளது. 2015-ம் நிதியாண்டில் 29%-மாக இருந்த மொத்த சுகாதார செலவு 2022-ம் நிதியாண்டில் 48%-மாக உள்ளது.
ஆயுஷ்மான் திட்டம் மக்களின் பாக்கெட்டிலிருந்து 1.25 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் 72.81 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இ-சஞ்ஜீவனி தளம் தொடக்க சுகாதார சிகிச்சையில் உலகின் மிகப் பெரிய தொலை மருத்துவ முன்முயற்சியாக உருவெடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097868
***
(Release ID: 2097868)
(Release ID: 2098215)
Visitor Counter : 8